சர்வதேச
அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது
ஐ.நா. குற்றச்சாட்டு
பாகிஸ்தானில்
இருந்து அகதிகளாக
வந்தவர்களிடம் விசாரணை கூட நடத்தாமல், அவர்களை
திருப்பி அனுப்பி,
சர்வதேச அகதிகள்
சட்டத்தை இலங்கை
மீறியுள்ளது என்று ஐ.நா. அகதிகள்
அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக
அகதிகள் விவகாரத்துக்கான
ஐ.நா.
மனித உரிமைகள்
ஆணையரின் செய்தித்
தொடர்பாளர் அட்ரியன் எட்வர்ட்ஸ், ஸ்விட்சர்லாந்து நாட்டின்
ஜெனீவா நகரில்
செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆகஸ்ட்
1ஆம் திகதி
தொடக்கம் இதுவரை பாகிஸ்தானைச் சேர்ந்த 88 பேரை இலங்கை
திருப்பி அனுப்பியுள்ளது.
தங்களது சொந்த
நாட்டுக்கு திரும்பிச் சென்றால், தாங்கள் பிரச்னைகளை
எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் மன்றாடியும்,
அதை இலங்கை
கேட்கவில்லை.
இது,
வலுக்கட்டாயமாக அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது
என்ற விதிகளை
மீறும் செயலாகும்.
இதன்மூலம், சர்வதேச சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அகதிகள்
திருப்பி அனுப்பப்படுவது
கவலையளிக்கிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்'
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment