இஸ்ரேல்-காஸாமுனை
போர்க்குற்றம் பற்றி விசாரிக்க
சர்வதேச விசாரணை குழு
இஸ்ரேலுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும்
பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே
ஒரு மாதகாலமாக நடந்து வந்த போரில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். காஸாமுனையில் 1,938 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 67 பேரும் கொன்று குவிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.
இந்தப் போரின்போது இரு தரப்பிலும் போர்க்குற்றங்கள் அரங்கேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக காஸாமுனையில் பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், ஒரே மின்நிலையம் ஆகியவை இஸ்ரேலால் தாக்கப்பட்டது, சர்வதேச அளவில் கடும் கண்டனத்துக்கு வழி வகுத்தது.
இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுகிறது. இந்த
3 உறுப்பினர் விசாரணைக்குழுவுக்கு கனடாவை சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணர் வில்லியம் சபாஸ் தலைமை
தாங்குவார். இந்தக் குழு
தனது விசாரணை அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஐ.நா. மனித உரிமை
கவுன்சிலில் அளிக்கும். எனினும் இந்த சர்வதேச விசாரணை குழுவை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.
0 comments:
Post a Comment