பள்ளிவாசல் வளவு வாகனதரிப்பிடமாகக்


கட்டுவதை எதிர்த்து தடை உத்தரவு


நுற்றாண்டு காலமாக இருந்து வரும் பள்ளிவாசல் சுற்று மதில் எல்லைகள், பள்ளிவாசல் நிறுவகத்தில் உள்ளோர் சிலரின்  தனிப்பட்ட நோக்கத்திற்காக, (அகலம்12′, நீளம் 80′ கொண்ட காணி) வாகனதரிப்பிடமாக கட்டுவதனை எதிர்த்து நேற்று தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
பள்ளிவாசலின் ஜமாத்தினர், வாகன தரிப்பிடம் அமைவது பள்ளிவாசலுக்கு சிறந்தது அல்ல என பலமுறை நிருவாகத்துக்கு அறிவித்தும் அதனை கண்டு கொள்ளாதான் காரணமாக, ஜமாத்தினர் வழக்கு தாக்கல் செய்து இடைகால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இது தொடர்பாக ஜும்ஆ தொழுகையின் பின்னர் பாரிய பிரச்சினை ஏற்பட்டதும் காரைதீவில் முகாமிட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் ஜீப் வண்டிகளில் விரைந்து வந்து பள்ளிவாசலுக்குள் நுழைய முற்பட்டதும் அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டதும் அன்று கட்டப்பட்ட பார்கிங் பொதுமக்களால் உடைத்து எறியப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கல்முனைக்குடி பெரியபள்ளிவாசல் வளவில் உள்ள மையவாடி வாகனத்தரிப்பிடமாக்கப்பட்டதை எதிர்த்து நேற்று (2003.07.18) அங்கே ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றன. வாகனத் தரிப்பிடக் கொட்டிலும் வேலியும் பிடுங்கி எறியப்பட்டன. என “ மையவாடியை வாகனத் தரிப்பிடமாக்குவதா? கல்முனைக்குடி பள்ளிவாசலில் பெரும் குழப்பம், தாக்குதலும் நடந்தது” என்ற தலையங்கமிட்டு தேசியப் பத்திரிகைகள் அன்று செய்திகளை வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top