திருடப்பட்ட கண்டி இராச்சியத்தின் 

வாள் மீட்பு

100 வருடத்திற்கு பழமைவாய்ந்ததாக நம்பப்படும் புரதான வாள் ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற 3 சந்தேக நபர்கள் 07.08.2014 அன்று இரவு அட்டன் பொலிஸாரால்; கைது செய்யப்பட்டு 08.08.2014 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட.னர்.
குறித்த சந்தேக நபர்களை 19.08.2014 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மேற்படி வாளை பற்றி விசாரணைகளை ஆராய்ந்து அட்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தொள்பொருள்துறை திணைக்களத்திற்கு அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் அமில ஆரியசேன உத்திரவிட்டமை குறிப்பிடதக்கது.
அந்தவகையில் தொள்பொருள்துறை திணைக்களம் குறித்த வாளை பற்றி ஆராய்ச்சி செய்து இந்த வாள் பல வருடத்திற்கு பழமை வாய்ந்த கண்டி இராச்சியத்திற்குரியது என அறிவித்துள்ளது.
16.08.2014 அன்று இதை பற்றி ஆராய்ச்சி செய்து 18.08.2014 அன்று இந்த வாள் கண்டி இராச்சியத்திற்குரியது என அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளது.

மஸ்கெலியா பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு வீடு ஒன்றில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த வாள் (வெள்ளி மற்றும் பித்தளையாலும் கலந்து செய்யப்பட்ட வாள்) சுமார் 36 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்படுகையில் குறித்த சந்தேக நபர்கள் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top