அமெரிக்கா
உதவியுடன்
மொசூல் அணையை
கைப்பற்றியது குர்தீஷ் படை
அமெரிக்கா
உதவியுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளை
விரட்டி மொசூல்
அணையை குர்தீஷ்
படை கைப்பற்றியுள்ளதாக
அறிவிக்கப்படுகின்றது.
ஈராக்கில்
ஷியா முஸ்லிம்
அரசுக்கு எதிராக
சன்னி முஸ்லிம்
பிரிவை சேர்ந்த
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் போர்க்கொடி
உயர்த்தி சண்டையிட்டு
வருகின்றனர். ஆகஸ்ட் 7 ஆம் திகதி ஈராக்கில்
குர்திஷ் படையினருடன்
கடும் சண்டையிட்டு
மொசூல் அணையை
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றினர்.
மின்சாரம் உற்பத்தி
செய்யப்படும் மொசூல் அணையை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே
குர்தீஷ்தான் தலைநகர் எர்பில் நோக்கி முன்னேறும்
போராளிகளை தடுக்கும்படி
ஈராக் மற்றும்
குர்தீஷ்தான் மாகாண அரசுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை
விடுத்தன. இதனையடுத்து
அமெரிக்கா போராளிகளுக்கு
எதிரான தாக்குதலை
தொடங்கியது.
ஈராக்கில்
மொசூல் அணை
மற்றும் குர்திஷ்
தலைநகர் எர்பில்
பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளை குறிவைத்து,
அமெரிக்க போர்
விமானங்கள் நேற்று குண்டு வீச்சு நடத்தின.
இதில் உயிர்ச்சேத
விவரம் குறித்து
தெரிய வரவில்லை.
ஈராக்கில் பல்வேறு
நகரங்களை தங்கள்
வசப்படுத்தியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளிடம் இருந்து
மொசூல் அணையை
மீட்க போராடி
வரும் குர்திஷ்
படைவீரர்களுக்கு ஆதரவாக, அமெரிக்கா வான்வழி தாக்குதல்
நடத்தியது. இதன் மூலம் அந்த அணைப்பகுதியின்
பெரும்பகுதி சுற்றிவளைத்து மீட்கப்பட்டது.
குர்திஷ் படைகளுக்கு
ஆதரவாக போராளிகளை
நோக்கி அமெரிக்கா
சரமாரியாக தாக்குதல்
நடத்தியது. தற்போது அனை குர்திஷ்தான் படை
கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment