காஸாவில்
2000-க்கும் அதிகமானோர் பலி
இஸ்ரேல்- ஹமாஸ்
இருமுனையிலும் தாக்குதல்
காஸாவில்
இஸ்ரேல் நடத்தி
வரும் தாக்குதலில்
பலியானோர் எண்ணிக்கை
2000-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில்
வெஸ்ட் பேங்க்கில்
பாடசாலை மாணவர்கள் 3 பேரை ஹமாஸ்
அமைப்பினர் கொன்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
காஸா
முனையில் இஸ்ரேல்
நடத்தி வரும்
தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2000-க்கும் மேலாக
அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
2,016 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 10,200-க்கும் அதிகமானோர்
காயமடைந்ததாகவும். மேலும் பலியான
இவர்களில் 541 குழந்தைகள், 250 பெண்கள்,
95 முதியவர்கள் அடங்குவர் என்றும் அந்நாட்டு இராணுவத்
தரப்பில் கூறப்படுகின்றது.
அதே
வேளையில், கடந்த
ஜூன் 12- ஆம்
திகதி, இஸ்ரேல்
நாட்டின் வெஸ்ட்
பேங்க் பகுதியில்
உள்ள ஹெப்ரான்
நகரின் பாடசாலையில்
படித்து வந்த
3 மாணவர்கள் காணாமல் போனார்கள். மாயமான மாணவர்களை
மீட்க இஸ்ரேல்
நடவடிக்கை எடுத்து
வந்த நிலையில்,
கொலை செய்யப்பட்ட
நிலையில் அவர்களது
உடல்கள் வெஸ்ட்
பேங்க் பகுதியில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ்
போராளிகள் தான்
இந்த படுகொலையை
நிகழ்த்தி உள்ளதாக
இஸ்ரேல் இராணுவம்
குற்றம்சாட்டியுள்ளது.
0 comments:
Post a Comment