பிரதமர் பதவி விலக கோரிக்கை
பாகிஸ்தான் பாரளுமன்றம் முற்றுகை

பாகிஸ்தான் பிரதமர் பதவி விலககோரி இம்ரான் கட்சியினர் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் முறைகேடுகளை செய்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும். பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவரான இம்ரான்கான் மற்றும் பழமைவாத தலைவர் தாஹிர் உல் காத்ரி ஆகியோர் போராடி வருகிறார்கள்.நாட்டில் மோசமான ஆட்சி நடத்தும் நவாஸ் ஷெரீப் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், உடனடியாக பொதுத்தேர்தலை நடத்திட வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று நள்ளிரவில் இம்ரான் கட்சியினர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம்ரான் கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.இவர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்கள்  முகமூடி அணிந்து கொண்டும் கையில் முட்கம்பிகள் மற்றும் கப்பல் கண்டெனய்ர்களை பூட்ட பயன்படுத்தும் மிகப்பெரிய பூட்டுகளையும் தங்கள் கைகளில் வைத்து குவிந்துள்ளனர். அதேபோல் கண்டெய்னர்களை அகற்ற புறப்படும் கிரேன்களை கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து அங்கு  இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.பாராளுமன்ற வளாகம் வெளியே போராட்டக்காரர்கள் குவிந்துள்ளதையடுத்து இராணுவத்தினர் அப்பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இராணுவம் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறதுஇந்த போராட்டம்  குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப்கூறுகையில், அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறுஅழைத்துள்ளேன். இதற்காக நான் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் மகள் மரியம் ஷரிப் இந்த போராட்டத்திற்கு எதிராக படைகள் பயன்படுத்தப்படாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்போராட்டக்காரர்களில் பெண்களும் குழைந்தைகளும் முன்வரிசையில் இருப்பதால் அவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் யாரையும் பயன்படுத்த வேண்டாம் என்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று எனது தந்தை பிரதமர் என்னிடம் தெரிவித்தார்என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top