பிரதி அமைச்சர்களாயினர் பிரபா மற்றும் திகாம்பரம்
18ஆவது
திருத்தச் சட்ட
மூலம் பாராளுமன்றில்
சமர்பிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவு வழங்கி
ஐக்கிய தேசியக்
கட்சியில் இருந்து
அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஜனநாயக மக்கள்
காங்கிரஸின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான பிரபா கணேசன் மற்றும் தொழிலாளர்
தேசிய சங்கத்தின்
தலைவரும் நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான ப.திகாம்பரம் ஆகியோருக்கு
பிரதி அமைச்சு
பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்
தேசிய சங்கத்தின்
தலைவரும், நுவரெலியா
மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான திகாம்பரம் தேசிய
மொழிகள் மற்றும்
சமூக ஒருமைப்பாட்டு
பிரதி அமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன்
தொலைத் தொடர்பு
மற்றும் தகவல்
தொழிநுட்ப அமைச்சின்
பிரதி அமைச்சராக
ஜனநாயக மக்கள்
காங்கிரஸ் தலைவர்,
கொழும்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment