விவசாயிகளே...!
ஜாக்கிரதை...!!
மக்கள் நண்பன்
சம்மாந்துறை
அன்சார்.
விவசாயிகளின்
இரத்தத்தை உறிஞ்சிக்
குடித்து ஏப்பம்
விட அலைந்து
கொண்டிருக்கும் சில வெளியூர் நெல் வியாபாரிகளிடம்
விவசாயிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
விவசாயிகள்
இப்போது நெல்
அறுவடைகளை முடித்துக்
கொண்டு தங்களிடம்
இருக்கும் நெல்லை
விற்பதற்காக நெல்வியாபாரிகளை நாடிச் சென்று
கொண்டிருக்கும் இத்தருவாயைப் பயண்படுத்தி,
அப்பாவி
விவசாயிகளிடம் இருந்து சில ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்கள் வெளியூர்களில் இருந்து
வருகை தந்து,
தங்களை ஒரு
நெல் வியாபாரிகளாக
அடையாளப்படுத்தியும், திட்டமிட்டு விவசாயிகளிடத்தில்
நம்பிக்கைக்குரிய நெல் வியாபாரிகள் போல் நடித்து
அவர்களது போலி
நேர்மையை வெளிக்காட்டி
இவ்வாறான கொள்ளைச்
சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபட்டிருக்கிறார்கள்.
எனக்குக்
கிடைத்த உண்மையான
ஒரு தகவலின்
அடிப்படையில் சென்ற போகம் ஒரு வெளியூர்
நெல் வியாபாரி
சுமார் ஒரு
கோடிக்கு மேலான
தொகையை ஏமாற்றியிருப்பதாக
அறியக் கிடைத்தது.
இந்த ஒரு
கோடிக்கு மேலான
தொகையானது ஒருவரிடமிருந்து
மாத்திரமல்ல மாறாக பல அப்பாவி விவசாயிகளிடமிருந்து
பெறப்பட்டதாகும்.
பட்டவெயிலில்
படாத பாடுபட்டு,
இரத்தம் சிந்தி
உழைத்த அப்பாவி
விவசாயிகளில் வியர்வையில், அவர்களின் ரத்தத்தில் இப்படி
சொகுசு வாழ்க்கை
வாழ இந்த
கேடுகெட்ட ஏமாற்று
நெல் வியாபாரிகளுக்கு
எப்படித்தான் மனசு வருகிறதோ...????
பணத்தைப்
பறிகொடுத்த அந்த விவசாயிகளில் எத்தனை பேர்
வங்கியில் அடகு
வைத்த நகையை
மீட்டெடுக்க முடியாமல் தவிக்கிறார்களோ...????
எத்தனை பேர்
மகளுக்கு வீடுகட்ட
முடியாமல் தவிக்கிறார்களோ...???
எத்தனை பேர்
தான் பட்ட
கடனை அடைக்க
முடியாமல் தவிக்கிறார்களோ...???
இவர்கள் அத்தனை
பேருக்கும் அந்த ஏமாற்று கயவன் அல்லாஹ்விடத்தில்
பதில் சொல்லியே
ஆக வேண்டும்.
விவசாயிகளே...!!!
நண்பர்களே...!!! சகோதரர்களே...!!! நீங்கள் கஷ்டப்பட்டு அறுவடை
செய்த விவசாயத்தில்
இலாபத்தை கள்வர்கள்
சுரண்டிச் செல்வதை
இட்டும் மிக
அவதானமாக இருக்கவும்.
உங்கள் நெல்களை
விற்பனை செய்யும்
போது, அதனை
வாங்குபவர்கள் தொடர்பாக மிக அவதானமாக இருக்கவும்.
அத்தோடு
வெளியூர் நெல்
வியாபாரிகள் தொடர்பாக மிக அவதானமாக இருங்கள்,
அத்தோடு உங்களுக்கு
அறிமுகமில்லாத நெல்வியாபாரிகளிடத்தில் உங்கள்
நெல்லை விற்பனை
செய்ய வேண்டாம்.
யாராக இருந்தாலும்
அவரது உண்மைத்தன்மையையும்,
தொழில் நேர்மையையும்
கவனத்தில் கொண்டு
உங்கள் நெல்லை
விற்பனை செய்யுங்கள்.
விவசாயிகளே...!
ஏமாற்றுபவர்கள் குறித்து ஜாக்கிரதை...!!
0 comments:
Post a Comment