இம்ரான்கானுடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் அரசு தொடங்கியது

பாகிஸ்தானின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பாகிஸ்தான் தெஹ்ரீத் இன்சாப் என்னும் கட்சியை நடத்தி வருகிறார். இவருடைய கட்சிக்கு 34 எம்.பி.க்கள் உள்ளனர். பாராளுமன்றத்தில் 3–வது பெரிய கட்சியாகவும் இவரது கட்சி திகழ்கிறது.கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மொத்தமுள்ள 392 பாராளுமன்ற தொகுதிகளில் 190 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
ஆனால்  தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டிய தெஹ்ரிக் இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் நவாஷ் ஷெரீப்பை  இராஜினாமா செய்யும்படி கூறி தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இம்ரான்கானுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தலைநகர் இஸ்லாமாபாத்தில்  உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இந்த பேச்சு வார்த்தையில் அரசு தரப்பில்  சில முக்கிய மந்திரிகள் மற்றும்  இம்ரான்கான் கட்சியின் பிரநிதிகள்  கலந்து கொண்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்கு முன் இமரான் விதித்துள்ள நிபந்தனைகளை அரசு தரப்பு ஆராய்ந்து வருகிறது. பாகிஸ்தானில் தேசிய சட்டமன்றத்தில் இன்று நாவாஷ் ஷெரீப் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன் இம்ரான்கான் தரப்பு தெரிவித்துள்ள நிபந்தனைகளாவது;
பிரதர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரியாக உள்ள அவரது சகோதரர் ஷாபாஷ் ஷெரீப்  பதவி விலகவேண்டும்இடைக்கால அரசு நியமிக்க வேண்டும். இடைத்தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும், தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும், அனைத்து தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும்.தேர்தலில் குளறுபடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிக்கவேண்டும் என இம்ரான்கான் நிபந்தனைகள் விதித்துள்ளார்.

இரு தரப்புக்கும் இடையே நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில்  சுமூக ஒப்பந்தம் ஏற்பட்டு நாட்டில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top