ஈராக்கில் அமெரிக்க பத்திரிகை நிருபர் தலை துண்டித்து கொலை வீடியோவை வெளியிட்டுஅமெரிக்காவுக்கு
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் எச்சரிக்கை

அமெரிக்க பத்திரிகை நிருபர் போராளிகளால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு .எஸ்..எஸ். போராளிகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜேம்ஸ் போலே (வயது 40). இவர் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் திடீரென மாயமானார்.
இதேபோல் மற்றொரு பத்திரிகை நிருபர் ஸ்டீவன் ஷாட்ஆப் என்பவரும் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாயமானார். ஜேம்ஸ் போலே வடக்கு சிரியாவில் இருந்து துர்கிஷ் எல்லைப்பகுதிக்கு சென்றபோது ஆயுதம் ஏந்திய போராளிகளால் கடத்திச்செல்லப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் .எஸ்..எஸ். போராளிகள் இணையதளத்தில் ஒரு வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டனர். அந்த வீடியோவில் மாயமான நிருபர் ஜேம்ஸ் போலே தலை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம்பெற்றிருந்தது. அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என அந்த வீடியோவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜேம்ஸ் போலே தனது குடும்பம், உறவினர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்து பேசுகிறார். பிறகு அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு பிணமாக சரிந்து விழுந்தார்.
அதைத் தொடர்ந்து போராளி ஒருவர் ஆங்கிலத்தில் பேசும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. அதில் அவர், ஈராக்கில் அமெரிக்க இராணுவம் குண்டு வீசி தாக்குகிறது. அப்பாவி மக்கள் சாவுக்கு காரணமாக உள்ளது. இந்த தாக்குதலை நிறுத்த வேண்டும். எங்களின் வாழ்வுரிமையையும், பாதுகாப்பையும் மறுத்தால் உங்கள் மக்கள் இரத்தம் சிந்துவார்கள். அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர்ந்து மற்றொரு பத்திரிகை நிருபர் ஸ்டீவன் உயிர்பிழைப்பார். அது உங்கள் கையில் உள்ளது என்று தெரிவிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆலோசித்து வருகிறார் என அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top