கல்முனைக்குடி பெரிய
பள்ளிவாயல் செயற்றிட்டம் சம்பந்தமான பிரச்சினை
நீதி மன்றம்
வரை சென்றது கவலையானது
உலமா கட்சி கவலை
கல்முனைக்குடி
பெரிய பள்ளிவாயல்
செயற்றிட்டம் சம்பந்தமான பிரச்சினையை சுமுகமான பேச்சுவார்த்தை
மூலம் தீர்;க்காமல் நீதி
மன்றம் வரை
சென்றது கவலையானது
என உலமா
கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தெரிவித்துள்ளார். இது பற்றி
அவர் மேலும்
தெரிவித்ததாவது,
கல்முனைக்குடி
பெரிய பள்ளிவாயல்
திருத்த வேலைகள்
1980களில் ஆரம்பிக்கப்பட்டு
அவை இன்னமும்
பூர்த்தியடையாமல் உள்ளது. இப்பள்ளிவாயலை திருத்தும் முயற்சியில்
80ம் ஆண்டுகளில்
கல்முனைக்குடி பள்ளிவாயல் நிருவாக சபை தலைவர்
வேண்டிக்கொண்டதற்கிணங்க நாம் மக்காவிலுள்ள
ராபித்தா மூலம்
சிறிய நிதியை
பெற்றுக் கொடுத்தோம்.
அதன் பின்
முன்னாள் அமைச்சர்
ஏ. ஆர்
எம் மன்சூர்
அவர்களும் பல
நிதிகளை பெற்றுக்
கொடுத்தார். அதன் பின் தற்போதைய பாராளுமன்ற
உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி
காரணமாக பள்ளிவாயல்
திருத்த வேலைகள்
தொடர்ந்தும் நடை பெற்றுக்கொண்டிருப்பதையும்
பூரணத்தை நெருங்கிக்கொண்டிரப்பதையும்
காண்கிறோம். இவற்றின் மூலம் மேற்படி பள்ளிவாயல்
அபிவிருத்தி விடயமாக கல்முனையின் அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் பெரிதும் அக்கறையுடன் செய்றபட்டு
வந்துள்ளதை காண்கிறோம்.
ஆனாலும்
மேற்படி பள்ளிவாயலின்
உள்வீதியின் பக்கம் நிறுவப்படவுள்ள வாகன தரிப்பிடம்
சம்பந்தமாக அண்மையில் சில முறுகல்கள் ஏற்பட்டு
நீதி மன்றம்
வரை சென்றுள்ளதாக
அறிகிறோம். அதுவும் சமூக ஒற்றுமை என்ற
கோசத்துடன் புறப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியை சேர்ந்தோரே
இதில் வாதிகளாகவும்
பிரதிவாதிகளாகவும் உள்ளதன் மூலம்
மேற்படி கட்சியினரால்
சிறியதொரு பிணக்கைக்கூட
பேச்சுவார்த்தையால் தீர்க்க முடியாதா
என்ற கேள்வியை
எழுப்பியுள்ளது. முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட
போது அதற்காக
நீதிமன்றங்களை நாடாதோர் பள்ளிவாயல் அபிவிருத்தியில் உடனடியாக
நீதிமன்றம் சென்றதன் மூலம் உள்வீட்டுச்சண்டையில் இவர்கள் வல்லவர்கள் என தெரிகிறது.
இச்சிறிய
பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கமுடியாமை என்பது
கல்முனை முஸ்லிம்களுக்கு
பெருத்த அவமானமாகவே
நாம் பார்க்கிறோம்.
ஆகவே
இது விடயத்தில்
இரு தரப்பிலும்
நியாயங்களும் இருக்கலாம், அநியாயங்களும் இருக்கலாம்: எதுவாகினும்
ஊரின் நலன்
கருதி
பேச்சுவார்த்தை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வின் மூலம் தீர்க்க வேண்டுமென்பதே
கல்முனைக்குடி மக்களின விருப்பமாகும். அதற்கு ஏற்ற
வகையில் ஊர்ப்பெரியார்கள்,
உலமாக்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்றிணைந்து
ஒரே மேசையில்
உட்கார்ந்து தமது சுயநலன்களுக்கப்பால் நின்று இறைவனின்
பள்ளிவாயல் என்பதை கருத்திற்கொண்டு பேசி தீர்க்க
முன் வர
வேண்டும் என
உலமா கட்சி
சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறது.
0 comments:
Post a Comment