பெண்
பொலிஸ் அதிகாரியுடன் நடனம் ஆடிய விவகாரம்:
ஆண் பெண்
வேறுபாடு எனபது அற்பமானது
நடிகர் ஷாருகான் சொல்கிறார்
கொல்கத்தா
நேதாஜி ஸ்டேடியத்தில்
நடந்த
ரக்ஷா பந்தன் விழாவில்
கலந்து கொண்ட நடிகர் ஷாருகானுக்கு முதல்-மந்திரி மம்தா
பானர்ஜி ராக்கி
கயிறு கட்டினார்.
அப்போது நிகழ்ச்சியில்
நடனம் ஆடிய
நடிகர் ஷாருகான்
பாதுகாப்பு பணியில் இருந்த பெண் பொலிஸ்
இன்ஸ்பெகடர் சம்மா ஹல்டரை தூக்கி நடனம்
ஆடினார்.
"எப்படி சீருடையில் இருந்த ஒரு
பெண் பொலிலீஸ்
அதிகாரி மேடையில்
நடனமாட அனுமதிப்பட்டார்?"
என்று பாரதீய
ஜனதா கட்சியின்
தலைவர் ரிதிஷ்
திவாரி கேள்வி
எழுப்பியுள்ளார். இப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள்
கையில் எடுத்துள்ளன.
காங்கிரஸ் கட்சியும்
இதே கேள்வியை
எழுப்பியுள்ளது. ஆனால் இது எதார்த்தமாக நடந்தது
என்று பொலிஸ்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக
சம்பத்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று
எதிர்க்கட்சியினர் வலியுறுத்தின
இது
குறித்து நடிகர்
ஷாருகான் கூறியதாவது:-
ஆண்கள்
மற்றும் பெண்கள்
இடையே
சீருடை வேறுபாடு என்பது அற்பமானது
இது
விசித்திரமாக இருக்கிறது...
4 - 5 வருடங்களுக்கு முன் நான் வீர் ஷாரா
படப்பிடிப்பில் இருந்தேன் அந்த நேரம் நான் இந்திய
இராணுவ வீரர்களுடன் சீருடையில்
ஆடினேன். 60- 70 க்களில் அதிக நடிகர்கள் இராணுவ
வீரர்களை ஊக்குவிக்க
எல்லையில் அவர்களுடன்
நடனமாடி உள்ளனர்.
முதல் முறையாக இது சீருடை பற்றியது அல்ல .அவர் சீருடையில் உள்ள ஒரு பெண் இன்ஸ்பெகடர் எனபதால் தான். பெண்கள் ஆண்கள் வேறு பாடு என்பது குப்பை மற்றும் அற்பமானது ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment