இந்தியாவிடம்
ஐ.நா. விசாரணைக் குழு
நுழைவு விசா
கோரவுமில்லை; மறுக்கப்படவும் இல்லை :
நவநீதம் பிள்ளை விளக்கம்
இலங்கையில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப் படுகொலை குறித்து
விசாரிக்க இலங்கைக்கோ,
வேறு எந்த
நாட்டுக்கோ சென்று விசாரிக்கும் வகையில் விசாரணைக்
குழுவினர் நுழைவு
விசா கோரி
விண்ணப்பிக்கவில்லை என்று ஐ.நா. மனித
உரிமை ஆணையாளர்
நவநீதம் பிள்ளை
விளக்கம் அளித்துள்ளார்.
இது
குறித்து அவர்
அனுப்பிய மின்னஞ்சலில்,
இலங்கை இனப்
படுகொலை குறித்து
விசாரிக்க இலங்கைக்கோ,
வேறு எந்த
நாட்டுக்கோ சென்று விசாரிக்கும் வகையில் விசாரணைக் குழுவினர் நுழைவு விசா கோரி விண்ணப்பிக்கவில்லை.
விசாரணைக் குழு இணைப்பாளர் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மீது சில இலங்கை ஊடகங்களில் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அவை முற்றிலும் தவறானது.
மேலும், இந்தியா, தாய்லாந்து அரசுகள், விசாரணைக் குழுவுக்கு நுழைவு விசா மறுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளும் தவறானவை. 12 பேர் கொண்ட விசாரணைக் குழு ஜெனிவாவைத் தளமாகக் கொண்டே செயல்படும். தேவைப்படின், ஏனைய நாடுகளுக்கும் அக்குழு பயணம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment