கல்முனை புதிய நகர் அபிவிருத்தி திட்டம்
500 மில்லியனை 4 மாதங்களுக்குள்
பயன்படுத்த வேண்டும்
இரண்டு மாதங்கள் நிறைவு!
இந்த
செய்தி கடந்த
ஜூலை மாதம்
வெளியாகியது. நான்கு மாதங்களுக்குள் 500 மில்லியனில் கல்முனை
புதிய நகர்
அபிவிருத்தி திட்டம் ஜூலை 15 முதல் தொடக்கம்
என மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது..
இன்று
செப்டம்பர் 16 உடன் இரண்டு மாதங்கள் உருண்டோடிவிட்டன.
கல்முனையில் இன்னும் ஒரு வேலைதானும் நடைபெறவில்லை எனத்
தெரிவிக்கப்படுகின்றது. . ஏன்
இன்னும் சொல்லப்போனால்
இந்த இரண்டு
மாத கால
இடைவெளியில் கல்முனை புதிய நகர் திட்டம்
சம்பந்தமாக ஒரு கூட்டம் கூட நடக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது..
ரூ 500 மில்லியனை . கல்முனை புதிய நகர் அபிவிருத்திக்காக 4 மாதங்களுக்குள்
பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.. அதில் 2 மாதங்கள் உருண்டோடி
விட்டன.
ரூ 500 மில்லியனை . கல்முனை புதிய நகர் அபிவிருத்திக்காக இன்னும்
இரண்டு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதை கல்முனை பிரதேச மக்கள் சார்பாக மீண்டும்
ஒரு முறை ஞாபகமூட்டுகிறோம்.
0 comments:
Post a Comment