அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்,
நாளை வேலைநிறுத்தம்?



அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நாளை 15 ஆம் திகதி (வியாழக்கிழமை) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அரச மருத்துவ சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளை அரச பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கும்போது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவே குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக குருநாகல், கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே இவ் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் இன்று கல்வியமைச்சரை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top