இன்று இடம்பெற்ற பிரதேச செயலாளர் 

.எல்.எம்.சலீம் எழுதிய

'வயலில்ஒருகிராமம்"நூல் வெளியீட்டு விழா

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அல்ஹாஜ் .எல்.எம்.சலீம் எழுதிய 'வயலில் ஒரு கிராமம்' என்னும் நூலின் வெளியீட்டு விழா இன்று 14 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி.வணிகசிங்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் அஷ்-ஷெய்க் எம்..அமீர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் .மன்சூர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் .எம்.ஹனீபா, இறக்காமம் பிரதேச செயலாளர் .எல்.எம்.நசீர், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா, சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் .எம்.றிகாஸ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், கணக்காளர் எம்.எம்.உசைனா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியா கட்டுப்பாட்டு வைத்தியர் என்.ஆரிப், கண் வைத்திய நிபுணர் எம்.எம்..றிசாத், சட்டத்தரணி என்.எம்.முஜீப், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.ஆதம்பாவா உள்ளிட்ட கல்விமான்கள், புத்திஜீவிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி.வணிகசிங்கவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.


  































0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top