இலங்கை கல்வி நிருவாகசேவைப்ப ரீட்சையில்
முதல்தடவையாக சம்மாந்துறையில்
ஒரு முஸ்லிம் பெண்மணி சித்தியடைந்து
சம்மாந்துறை
வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில்
முதல்தடவையாக ஒரு முஸ்லிம் பெண்மணி
சித்தியடைந்து பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
சம்மாந்துறை
அல் முனீர்
முஸ்லிம் வித்தியாலயத்தில்
ஆசிரியையாகப் பணியாற்றும் செல்வி அப்துல்காதர் நுஸ்ரத் நிலுபரா
என்பவரே இவ்வரலாற்றுச்சாதனையைப்
புரிந்துள்ளார்.
இதுவரைகாலமும்
சம்மாந்துறையிலிருந்து பெண் ஒருவர்
இவ்வுயர் பரீட்சையில்
சித்தியடைந்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை
வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம்
இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை நேரடியாகப்
பாடசாலைக்குச் சென்று இவ்வரலாற்றுச் சாதனை புரிந்த
ஆசிரியை செல்வி ஏ.சி.என்.நிலுபராவைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment