ஓமானில் இலங்கை யுவதிகள் இருவர்
நீரில் மூழ்கி மரணம்



இலங்கை யுவதிகள் இருவர் ஓமான் நாட்டில் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஓமான் நாட்டின் டைம்ஸ் ஒப் ஒமான் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இரண்டு குடும்பங்களையும் சேர்ந்த இந்த இரு யுவதிகளும் தனது தொலைபேசியில்செல்பிஎடுக்க முற்பட்டபோதே, நேற்று 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரு குடும்பங்களையும் சேர்ந்தவர்கள் விநோதமாக சுற்றுலா சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓமானிலுள்ள சலாலாஹில் உள்ள இந்திய பாடசாலையில் கல்வி பயிலும் ஆர்.டீ. ஹேரத் சமரவீர uwane Delsara Herath Samaraweera மற்றும் ஓமான் தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் ஸைனப்  Zainab என்பவர்களே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top