முறைப்பாடுகளுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க
தவறினால் கைபேசிக்கு அறிவிக்க கோருகிறார்

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர


பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால் அது குறித்து நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் என பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள், 0718592020  என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு இது பற்றிய முறைப்பாடுகளை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் மிகவும் அவசரமான நிலைமைகள் இருந்தால் தம்மை தொடர்பு கொண்டு அவற்றை அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சின்ன சின்ன முறைப்பாடுகள் காவல்துறையினரால் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.


இந்த தொலைபேசி அழைப்பிற்கு தனது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் பதிலளிப்பார் எனவும், அவர் தமக்கு தகவல்களை வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top