எதிர்க்கட்சிக்கு மாறிய மாகாண சபை உறுப்பினர் அமீர்!

ஆட்சியில் அதிருப்தியுற்ற நிலையில் தாவியுள்ளதாக தெரிவிப்பு!!


கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று வியாழக்கிழமை ஆரம்பமானபோது, மாகாண சபையில் ஆளும் கட்சி வரிசையில் இருந்த மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டார்.
 மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவர், கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியில் இணைந்து செயற்பட்டார். கிழக்கு மாகாண சபை ஆட்சியில் அதிருப்தியுற்ற நிலையில் எதிர்க்கட்சிக்கு தாவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

இவர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டம், சம்மாந்துறைத் தேர்தல் தொதியைச் சேர்ந்த சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top