தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில்
முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் செயலமர்வு



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வொன்று எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கொழும்பு டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஆரம்ப உரையை அமைச்சர் ஹக்கீம் ஆற்றுவதோடு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தின உட்பட துறைசார் வல்லுநர்கள், வளவாளர்கள் தேர்தல்களில் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்பன தொடர்பில் உரைநிகழ்த்துவர்.

இதற்கு கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாடெங்கிலிமிருந்து அரசியல் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் செயலமர்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள் உட்பட ஏனைய முக்கிய முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top