சாய்ந்தமருது பிரதேச கலை இலக்கிய விழா;

பதவியுயர்வு பெற்றுச் செல்லவுள்ள

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீமுக்கு விசேட பாராட்டு!

சாய்ந்தமருது பிரதேச கலை இலக்கிய விழா கடந்த 5 ஆம் திகதி புதன்கிழமை மாலை குடியேற்றக் கிராமமான பொலிவேரியன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகமும் சாய்ந்தமருது கலாசார அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்விழா கலாசார அதிகார சபையின் பிரதித் தலைவரும் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளருமான கவிஞர் .பீர்முஹம்மத் தலைமையில் இடம்பெற்றது.

இதில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

இவ்விழாவில் சட்டம், ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லவுள்ள சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம்.சலீம் பாராட்டி கௌரவிக்கபட்டார்.
இது தொடர்பான சிறப்புரையை கவிஞர் நவாஸ் சௌபி நிகழ்த்தியதுடன் கவிஞர் தீரன் ஆர்.எம்.நௌஸாத் கவி வாழ்த்து பாடினார். இவ்விழாவில் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top