திடீரென சென்னை வந்தது ஏன்?
ராகுல் அளித்த பரபரப்பு விளக்கம்




சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு திடீரென வந்தது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் விளக்கம் அளித்தார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று காலை வந்த ராகுல் காந்தி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் குழு ராகுலுக்கு விளக்கம் அளித்தது.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காட்சியளித்தது.

செய்தியாளர்கள் அனைவரும் ராகுலிடம் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டதால், ராகுல் என்ன சொன்னார் என்பது கூட செய்தியாளர்களால் கேட்க முடியாமல் போனது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் கூறியதாவது, முதல்வரை சந்திக்க தில்லியில் இருந்து வந்தேன். முதல்வர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.


சிகிச்சை பெறும் ஜெயலலிதாவுக்கு, சோனியா காந்தியின் ஆதரவையும் நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கவே வந்தேன். முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைவார் என்று கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top