கவர்னருடன் .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு



நிதியமைச்சர் .பன்னீர்செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாட்டின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் அவரின் உடல்நலம் மிகுந்த முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 15 நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவனையில் இருப்பதால் அரசு தலைமை இன்றி தவிக்கிறது.

இந்நிலையில், மூத்த அமைச்சர்களான நிதியமைச்சர் .பன்னீர்செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் திடீரென கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்பின் போது தலைமை செயலர் ராமமோகன ராவ் உடன் இருந்தார்.
அரசின் நிர்வாக பொறுப்பை யார் தலைமை ஏற்று கவனிப்பது? , துணை முதல்வரை நியமிப்பதா? என்பன உள்ளி்ட்ட விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

முன்னதாக, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் கவர்னரை சந்தி்த்து இன்று காலை ஆலோசனை நடத்தினார்.


சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top