தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு
தொடர்ந்து நுரையீரல் சிகிச்சை

அப்பல்லோவெளியிட்டுள்ள அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படுவதாக இன்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை தலைமை நிர்வாக அலுவலர் சுப்பையா விஸ்வநாதன் இன்றைய அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் . அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் சீர் செய்யப்படுகிறது. மேலும் ஊட்டச்சத்து, பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் மேலும் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top