சிறுவன் ஜுனைத் அஹமது பலியானதால்
காஷ்மீரில் மீண்டும் பதற்றம்!
காஷ்மீரில்
பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய பெல்லட் குண்டு
பாய்ந்து 12 வயது சிறுவன் ஜுனைத் அஹமது பலியாகியுள்ள
சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர்
மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க
தளபதி பர்கான்
வானி பாதுகாப்பு
படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து
அங்கு கடந்த
3 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில்,
ஸ்ரீ நகரில்
பாதுகாப்பு படையினருக்கும், ஆர்பாட்டக்காரர்களுக்கும்
இடையே நடந்த
மோதலில் பாதுகாப்புப்
படையினர் நடத்திய
துப்பாக்கி சூட்டில் 12 வயது சிறுவன் ஜுனைத் அஹமது பலியாகியுள்ளார்.
இதனால்
காஷ்மீர் வன்முறையில்
பலியானோர் எண்ணிக்கை
86 ஆக உயர்ந்தது.
அதே நேரம்
அதிகாரபூர்வமற்ற தகவல்கள் 91 பேர் பலியானதாக தெரிவிக்கின்றன.
சிறுவன்
கொல்லப்பட்டதை கண்டித்து ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இதனால் மீண்டும்
பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் ஏழு பொலிஸ் நிலையங்களை சுற்றியுள்ள
பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



0 comments:
Post a Comment