ஆளுநரை சந்தித்தது ஏன்?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு, முதல்வரின் உடல்நிலை குறித்து வைகோவிடம் விளக்கி கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முதல்வர் நலமாக இருப்பதாக கூறினார். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து நேராக ஆளுநர் மாளிகைக்கு வைகோ சென்றார். ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழக முதல்வரை நாளை சந்திக்க வருகிறேன். அப்போது தங்களை நேரில் வந்து சந்திக்க முடியுமா என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கேட்டேன். அவர் உடனே, தாராளமாக வாருங்கள் என்றார். இதன் அடிப்படையிலேயே அவரை சந்தித்தேன். ஆளுநர் வித்யாசாகர் ராவ் எனது பழைய நண்பர். நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். பொறுப்பு, இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top