தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில்

முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வொன்று கொழும்பு டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று 8 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அவர் ஆரம்ப உரையாற்றியதோடு அமைச்சர் மனோ கணேசன், கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் எம்..எம். ஹக்கீம், கலாநிதி சுஜாதா கமகே ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் என பல பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டனர்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top