இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்

ரிக்டரில் 6.5 ஆக பதிவு



இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. இங்குள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
அச்சத்தில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிகாப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மையத்தில் இருந்து சுமார் 590 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கப்பூரிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கம் சுமார் 10 நொடிகள் உணரப்பட்டதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் நுக்ரோஹோ தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top