நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் உள்ளிட்ட அனர்த்தங்கள் இடம்பெற்றால், அதனை வைத்தியசாலை எவ்வாறு முகாமை செய்வது என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்வு, மிகவும் தத்ரூபமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று 20 ஆம் திகதி இடம்பெற்றது.

களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு முன்னால் கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் தத்ரூபமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு விபத்தில் எவ்வாறு காயப்பட்டவர்களை மீட்பது, நோய்காவு வண்டியில் எவ்வாறு கொண்டு செல்வது, வைத்தியசாலையில் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது, பதிவுகளை மேற்கொள்ளவது, உள்ளிட்ட பல விடையங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் அனத்த பாதுகாப்புப் பிரிவினர், பொதுமக்கள், களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பார்வையாளர்களுக்கும் விழிப்புணர்வூட்டிய இந்த தத்ரூபமான அனர்த்த ஒத்திகை நிகழ்வு படிப்பினைக்குரியதாக இருந்தமை சிறப்பம்சமாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top