இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் நிலையான (2010) விலையில் 2,211,612 ரூபா மில்லியன்களாக அதிகரித்துள்ளது. இது 2016 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,125,848 ரூபா மில்லியன்களாகும்.
இது தொடர்பாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விவசாயம் 8.2 சதவீதம், கைத்தொழில் , சேவைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள் நடப்பு விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தமது பங்குகளை முறையே 8.2 சதவீதம், 25.9 சதவீதம், 56.6 சதவீதம் மற்றும் 9.4 சதவீதமாக பங்களிப்பு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பொழுதில், கைத்தொழில் மற்றும் சேவைகள் நடவடிக்கைகளாவன வளர்ச்சி வீதங்களாக 5.2 சதவீத, 4.4 சதவீதமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. எவ்வாறெனினும் மொத்த விவசாய நடவடிக்கைகள் மறை வளர்ச்சியான 2.9 சதவீத விளைவை பதிவு செய்கின்றது. பொருளாரத்தின் விவசாய துறை சாதகமல்லாத காலநிலை நிலைமையால்(கடும் வறட்சியும் அத்தோடு பெரும் மழையும்) கடந்த 18 மாத காலப் பொழுதில் நாட்டின் சில மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை எதிர்கொண்டதன் விளைவாக , விவசாய துறை கடந்த 6 காலாண்டுகளாக மறை வளர்ச்சி வீதத்தையே காட்டுகிறது.
முந்தைய வருடத்தின் அதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, விவசாய துறையின் உப பிரிவுகளுக்கிடையில், சேர்க்கப்பட்ட பெறுமதியானது 'நெல் வளர்ச்சி' , 'எண்ணெய் சார்ந்த பழங்களின் வளர்ச்சி: தேங்காய் உள்ளடங்கலாக', 'தானியங்களின் வளர்ச்சி (நெல் நீங்கலாக)', 'காய்கறிகளின் வளர்ச்சி', 'வாசனைத்திரவியங்களின் வளர்ச்சி', என்பன முறையே 32.9 சதவீத, 20.2 சதவீத, 15.3 சதவீத, 5.9 சதவீத மற்றும் 3.8 சதவீதத்தால் இக் காலாண்டுப் பகுதியில் குறைந்துள்ளது. எவ்வாறாயினும் மேலும் கவனிக்கத்தகதாக 'இறப்பர் வளர்ச்சி', மற்றும் 'தேயிலை வளர்ச்சி' என்பன கடந்த 3 வருடங்களில் தொடர்ச்சியான மறை வளர்ச்சி வீதங்களை காலாண்டுகளில் பதிவு செய்துள்ளதுடன், 2017ஆம் இரண்டாம் காலாண்டில் இவை முறையே 10.2 சதவீத ,6.9 சதவீத குறிப்பிடத்தக்க நேர் வளர்ச்சி வீதங்களை பதிவு செய்துள்ளன. மேலும் 'விலங்கு உற்பத்தி' மற்றும் 'நன்னீர் மீன்பிடி' என்பன முறையே 10.9 சதவீத , 9.0 சதவீத கணிசமான நேர் வளர்ச்சி வீதங்களை பதிவு செய்துள்ளன. சில விவசாய நடவடிக்கைகள்; அவையாவன 'காடாக்கலும் குத்திகளும்' மற்றும் 'கடல் மீன்பிடி' என்பன 2017 ஆம் இரண்டாம் காலாண்டுப் பொழுதில் நேர் வளர்ச்சி வீதங்களை (5.5 சதவீத , 3.1 சதவீத) பதிவு செய்தன .
இந்த காலாண்டில் கைத்தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நடப்பு விலைகளில் 25.9 சதவீத பங்களிப்பை செய்ததுடன், கணிசமான 5.2 சதவீத வளர்ச்சி வீதத்தை ஒட்டுமொத்த கைத்தொழில் நடவடிக்கையும் பதிவு செய்கிறது. கைத்தொழில் துறையின் பிரிவுகளுக்கிடையில் 'கட்டடவாக்கம்' கைத்தொழில் துறைக்கு உயர் பங்களிப்புடன், 2016 இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இக் காலாண்டில் 9.3 சதவீதத்தால் வளர்ச்சியையும் காட்டியுள்ளது. கட்டடவாக்கல் நடவடிக்கைகளுக்கு சமாந்திரமாக ' சுரங்கமகழ்தல் மற்றும் கல்லுடைத்தல் நடவடிக்கை 18.4 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி வீதத்தை பதிவு செய்கிறது. 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முழு கைத்தொழில் நடவடிக்கைகள் 0. 9 சதவீதத்தால் வளர்ச்சி அடைந்துள்ளது. இக் காலாண்டில் 'உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை உற்பத்தி' மற்றும் 'புடவை மற்றும் ஆடையணிகள் உற்பத்தி' என்பன முறையே 2.2 சதவீத மறை வளர்ச்சி வீதத்தையும், 2.5 சதவீத நேர் வளர்ச்சியை காணக்கூடியதாகவும், முழு கைத்தொழில் நடவடிக்கைகளில் உயர் பங்களிப்பை கொண்டனவாகவும் உள்ளன. மேலும் 'தளபாட உற்பத்தி' மற்றும் இறப்பர் மற்றும் பிளாத்திக்கு பொருட்கள் உற்பத்தி முறையே 12.4 சதவீத, 8.4 சதவீத குறிப்பிடத்தக்க நேர் வளர்ச்சி வீதங்களை பதிவு செய்துள்ளன.
மூன்று பிரதான நடவடிக்கைகளில், 2016 ஆம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சேவைத் துறையின் நடவடிக்கைகள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு உயர் பங்களிப்பை (56.6) வழங்குவதுடன், 4.4 சதவீத நேர் வளர்ச்சி வீதத்தை பதிவு செய்கிறது. சேவைத் துறையின் செயற்பாடு விசேடமாக பின்வரும் உப பிரிவுகளில் 'நிதிச் சேவை நடவடிக்கைகள்', 'மனித நல நடவடிக்கைகள்', மற்றும் 'தொலைத்தொடர்புகள் , குறிப்பிடத்தக்க உயர் வளர்ச்சி வீதங்களை முறையே 16.4 சதவீத, 13.2 சதவீத, மற்றும் 12.4 சதவீதத்தை பதிவு செய்துள்ளன. இத்துடன் 'மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்', 'பொருட்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து' மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு உயர் பங்களிப்பை கொண்டதுடன் 4.0 சதவீத மற்றும் 1.6 சதவீதங்களை முறையே விரிவுபடுத்தியுள்ளன.
0 comments:
Post a Comment