அரச ஊழியர்களுக்கான சம்பளம், அரச செலவுகள்
வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் சிக்கல்கள்
மைத்திரி - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு
ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி!


அடுத்த நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் செலவினங்களுக்காக இடைக்கால நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சரவையில் தாக்கல் செய்து அனுமதியை பெற வேண்டும் என்ற நிலையில், அமைச்சரவையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்திரமான நாடாளுமன்றம் சம்பந்தமான ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில், இடைக்கால நிதி நிலை அறிக்கை ஒன்றை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைக்கால நிதி நிலை அறிக்கை மூலம் அரசாங்கத்தின் அன்றாட செலவுகள் மற்றும் கடனை செலுத்துவதற்காக நிதி ஒதுக்கப்படும்.

இந்த இடைக்கால நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். தற்போது காணப்படும் நிலைமையில், மஹிந்த ராஜபக்ஸ அணியினரால் நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிறைவேற்றுவது சிரமமானது.

ஐக்கிய தேசிய முன்னணி உட்பட 122 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஸ உட்பட அவரது அணியினர் மீது நம்பிக்கையில்லை என நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இடைக்கால நிதி நிலை அறிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம், அரச செலவுகள் மற்றும் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top