ஆசிரியர் தொழிலை
வேறு எந்த தொழிலுடனும் ஒப்பிட முடியாது

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

ஆசிரியர் தொழிலை வேறு எந்தத் தொழிலுடனும் ஒப்பிட முடியாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் தொழில் உலகில் மிகவும் மகத்துவமான ஒரு தொழிலாக கருதப்படுவதால், அதனை வேறு எந்தவொரு தொழிலுடனும் ஒப்பிட முடியாது என்று கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய நகரில் அமைந்துள்ள சுரதுத மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் கட்டிடம் 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற திட்டத்தின் கீழ் இந்த வகுப்பறை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top