“வாழ்வதற்கு
வழியில்லை...
பணமில்லை..
அதனால் …….
கொள்ளுப்பிட்டியில்
ரயிலில் மோதி
இரண்டு சிறுவர்கள் உட்பட
மூவர் ஸ்தலத்தில் பலி!
கொழும்பில்
நேற்று மாலை ரயில் மோதியதில் இரண்டு சிறுவர்கள்
உட்பட மூவர்
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு
கொள்ளுபிட்டி பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில்
இந்த கோர
சம்பவம் இடம்பெற்றுள்ளது.அளுத்கமவிலிருந்து கொழும்பு துறைமுகத்தைநோக்கி
ரயில்சென்றபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது
ஒருபெண் மற்றும்
இரண்டு சிறுவர்கள்
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொட்டாஞ்சேனையை
சேர்ந்த ஜெனட்
தர்ஷினி ராமையா
என்ற 32 வயதுப்
பெண் தனது
10 மற்றும் 12 வயது மகன்களுடன் ரயில் முன்
பாய்ந்து தற்கொலை
செய்து கொண்டுள்ளார்
எனத் தெரிய வந்திருக்கிறது...
நேற்று
இரவு நடந்த
இந்த சம்பவத்தின்
பின்னர் அவரின்
கைப்பையை சோதனையிட்ட
பொலிஸ் , “வாழ்வதற்கு
வழியில்லை... பணமில்லை.. அதனால் தற்கொலை செய்துகொள்வதாக”
சொல்லும் ஒரு
கடிதம் அதில்
இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment