ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சி
ஆளும் கட்சியாக
இருப்பதற்கும் தகுதி இல்லை.
எதிர் கட்சியாக
இருப்பதற்கும் தகுதி இல்லை
இரண்டிலும் நிருபித்துவிட்டார்கள்
அரசியல் அவதானிகள் கருத்து
ரணில் தலைமையிலான
ஐ.தே.கட்சி ஆளும் கட்சியாக இருப்பதற்கும் தகுதி இல்லை. எதிர் கட்சியாக
இருப்பதற்கும் தகுதி இல்லை என்பதை நிருபித்துவிட்டார்கள் என அரசியல் அவதானிகள் கருத்துக்களைத்
தெரிவித்து வருகின்றனர்.
மஹிந்த ஆட்சியில் வீராப்புள்ள
எதிர்க்கட்சியாக ரணில் குழு செயல்படாததால் மஹிந்த குழு தான் விரும்பியவாறு ஆட்சியை
கொண்டு சென்றார்கள்.அவர்களால் எதிர் கட்சியாகக் கூட தைரியமாவும் சரியாகவும்
செயல்பட முடியவில்லை என்பதை கடந்த ஆட்சியில் மக்களால் அவதானிக்க முடிந்ததாக மக்கள்
தெரிவிக்கின்றனர். .
ரணில் குழு ஆளும்
கட்சியாக தற்போது பதவி வகிக்கும் காலத்தில்
மஹிந்த குழுவினரின் எதிர்ப்புக்களுகே முகம் கொடுத்து வருகிறார்களே தவிர மக்களுக்கு
உருப்படியான சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.
மஹிந்த குழுவினர்
அதிகாரம் கிடைத்தவுடன் பலமான ஆளும்
கட்சியாகவும் இருந்தார்கள். ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் பலமான வீராப்புள்ள
எதிர் கட்சியாகவும் செயல்பட்டு ரணில் குழுவினரை அவர்களின் ஆட்சி கால ஆரம்பம்
தொடக்கம் இன்றுவரை எதிர்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
அதாவது மஹிந்த
குழுவினர் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு எப்படி அதிகாரத்திற்கு வருவது என்று
திட்டமிட்டு சிந்தித்து செயல்படுகின்றார்கள்.ஆளும் கட்சியினர் எப்படி தமக்குக்
கிடைத்திருக்கும் அதிகாரத்தை தக்கவைத்துகொள்வது என்று சிந்தித்து
செயல்படுகின்றார்களே தவிர எமது நாட்டின்
முன்னேற்றம், மக்களின் எதிர்காலம் பிரதேச அபிவிருத்தி பற்றி சிந்திக்கப்படுவதாக
இல்லை.

0 comments:
Post a Comment