வைத்தியர் ஷாபி பெண்களுக்கு கருத்தடை செய்வதையோ
பலோபியன் குழாய்களுக்கு சேதம் ஏற்படுத்துவதையோ
தாம் ஒருபோதும் கண்டதில்லை
69 தாதிகளின் வாக்குமூலம்!
குருநாகல்
வைத்தியசாலையின் வைத்தியர் செய்கு சிஹாப்தீன் மொஹமட் ஷாபியுடன்
சிஸேரியன் சத்திரசிகிச்சையில்
ஈடுபட்ட 69 தாதிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வைத்தியருக்கு சார்பாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
சிஸேரியன்
சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் வேளையில் வைத்தியர் ஷாபி
பெண்களுக்கு கருத்தடை செய்வதையோ பலோபியன் குழாய்களுக்கு
சேதம் ஏற்படுத்துவதையோ
தாம் ஒருபோதும்
கண்டதில்லை என வாக்குமூலமளித்த 69 தாதிகளும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை
குறித்த தாதிகளில்
மேலும் ஒரு
தாதியிடம் வாக்குமூலம்
பெறப்படவுள்ள நிலையில் அவர் தற்போது கொழும்பு
தேசிய வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று
வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment