உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்:
பொறுப்பேற்க வேண்டியவர்கள் புலனாய்வாளர்களே
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
உயிர்த்த
ஞாயிறு தாக்குதல்களின்
பிரதான சூத்திரதாரியான
சஹ்ரானின் பயங்கரவாத
செயற்பாடுகள் காரணமாக முழு நாட்டுக்கும் பிரச்சினைகள்
ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிலமைகளுக்கு நாட்டின்
புலனாய்வாளர்களே முழு பொறுபையும் ஏற்க வேண்டும்
என கிழக்கு
மாகாண முன்னாள்
ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
தெரிவித்திருக்கின்றார்.
மட்டக்களப்பு
– புனானை பிரதேசத்தில்
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டு
வரும் தனியார்
பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்
வாக்கு மூலம்
வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்
ஹிஸ்புல்லா இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஹிஸ்புல்லாஹ்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது
,
“சஹ்ரானின்
பயங்கரவாத செயற்பாடு
காரணமாக முழு
நாட்டுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கு புலனாய்வாளர்களே
பொறுப்பேற்க வேண்டும். இராணுவம், பொலிஸ் மற்றும்
குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளில்
உள்ள புலனாய்வார்களே
இதற்கு பொறுப்பு
கூறவேண்டும். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில்
இதனை நான்
நேற்று தெளிவுபடுத்தினேன்.
எம்மை போன்ற
அரசியல்வாதிகளிடம் அது தொடர்பில்
அறிந்திருந்தீர்களா என்று கேட்பதைவிட
இந்த விடயங்கள்
தொடர்பில் புலனாய்வாளர்களே
அறிந்திருக்க வேண்டும்.
பயங்கரவாதி
ஒருவர் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவுக்கு
ஆதரவாக செயற்பட்டதாக
நேற்றைய தினம்
இடம்பெற்ற விசாரணையின்
போது பகிரங்கமாக
தெரிவித்த கூற்றுக்கள்
பாரதூரமானவை இல்லையா என ஊடகவியலாளர்கள் அவரிடம்
கேள்வி எழுப்பினர்.
இதற்கு
பதிலளித்த அவர்
2017ஆம் ஆண்டுவரை
தமது சொந்த
ஊரில் தங்கியிருந்த
சஹ்ரான் சமய
அடிப்படை வாதியாகவே
காணப்பட்டதுடன், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
2017ஆம் ஆண்டுவரை அந்த பிரதேசத்தில்
இருந்தார். அந்தக் காலப்பகுதியில் சஹரான் தீவிரவாத
நடவடிக்கையுடன் தொடர்புபட்டிருக்கவில்லை. சமய
அடிப்படைவாதத்துக்கு வேலைசெய்தார்.அவ்வளவுதான்.
2017ஆம் ஆண்டு
ஊரில் இருந்து
வெளியேறியபின்னர் தீவிரவாதியாக மாறியுள்ளார்.
அவர் தனது
ஊரில் அடிப்படைவாத
மதப்பற்றாளராக காணப்பட்டார். 2015ஆம் ஆண்டு தௌஹீத்
ஜமாஅத் என்ற
அமைப்பு அவரிடம்
காணப்பட்டது அவருக்கு ஆதரவு காணப்பட்டால் அவர்
ஜனாதிபதி தேர்தலின்போது,
ஜனாதிபதிக்கு ஆதரவளித்தார். அப்பபோது அவர்
தீவிரவாதி இல்லை
என்பதால் இது
கூறித்து நான்
தெரிவித்ததில் பிரச்சினையில்லை.
ஹஸ்ரானின்
பயங்கரவாத செயற்பாடுகள்
தொடர்பில் புலனாய்வாளர்களே
அதிக கவனம்
செலுத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன், அவர்களினால் இழைக்கப்பட்ட தவறுகளினால் ஏற்பட்ட
கொடூரம் தொடர்பில்
அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்புவது
நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment