கல்முனை மாநகர பஸார் பகுதியில் மாத்திரம்
பொஷன் அலங்காரங்களை மேற்கொள்வதுடன்
அன்னதான ஏற்பாட்டையும் செய்வதற்கும்
கலந்துரையாடலில் இணக்கம்

முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் பொருட்டு, கல்முனை மாநகர சபை எல்லைக்குள் முஸ்லிம்கள் நூறு வீதம் வாழ்கின்ற சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை போன்ற ஊர்களை முற்றாகத் தவிர்த்து கல்முனை மாநகர பஸார் பகுதியில் மாத்திரம் பொஷன் அலங்காரங்களை மேற்கொள்வதுடன் அன்னதான ஏற்பாட்டையும் செய்வதற்கு கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டிருக்கிறது.

இராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகரில் பொஷன் பண்டிகைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களிலும் பொஷன் சோடனைகளை அமைக்குமாறு இராணுவ அதிகாரிகளினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம் ஊர்களைத் தவிர்த்து எல்லோருக்கும் பொதுவான கல்முனை மாநகர டவுன் பகுதியில் மாத்திரம் மட்டுப்படுத்தி செய்வது குறித்து இக்கலந்துரையாடலில் பரிசீலிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய சகவாழ்வுக்காக முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் பொருட்டு, கல்முனை மாநகர சபை எல்லைக்குள் முஸ்லிம்கள் நூறு வீதம் வாழ்கின்ற சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை போன்ற ஊர்களை முற்றாகத் தவிர்த்து கல்முனை மாநகர பஸார் பகுதியில் மாத்திரம் பொஷன் அலங்காரங்களை மேற்கொள்வதுடன் அன்னதான ஏற்பாட்டையும் செய்வதற்கு கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டிருக்கிறது.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் அனுசரணையுடன் கல்முனை மாநகர சபையினால் இவ்வேலைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top