சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்
பிக்குவின் உடல்நிலை மோசம்!
சாகும்
வரை உண்ணாவிரதப்
போராட்டத்தை ஆரம்பித்திருந்த கல்முனை சுபத்திரா ராமய
விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல்நிலை
மோசமடைந்துள்ளதால், முதலுதவி சிகிச்சை
வழங்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்முனை
வடக்கு தமிழ் உப பிரதேச
செயலகத்தை தரமுயர்த்தக்கோரி,
மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று காலை
9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.
கல்முனை
சுபத்திரா ராமய
விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின்
இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம்
குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன்
விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை
அம்பாறை, கல்முனை
வடக்கு தமிழ்
பிரதேச செயலகத்தை
தரமுயர்த்தும் வரை இந்த சாகும் வரை
உண்ணாவிரத போராட்டத்தை
கைவிடப்போவதில்லை” என போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே
தேரரின் உடல்
நிலை மோசமடைந்துள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 comments:
Post a Comment