'மேஜிக்' செய்ய
முயன்றவர்,
ஆற்றில் மூழ்கி
காணாமல் போன மாயம்
மேற்கு வங்கத்தில், கை
- கால்கள் கட்டப்பட்ட
நிலையில், கங்கை
நதியில் குதித்து,
மீண்டு வரும்
'மேஜிக்' செய்ய
முயன்றவர், ஆற்றில் மூழ்கி காணாமல் போனது,
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு
வங்க மாநிலத்தை
சேர்ந்த மேஜிக்
நிபுணர், சான்சல்
லஹிரி. இவர்,
கை - கால்கள்
கட்டப்பட்ட நிலையில், கங்கை நதிக்குள் குதித்து,
மீண்டு வரும்
மேஜிக் காட்சியை
நிகழ்த்த திட்டமிட்டார்.
இதற்காக,
கோல்கட்டாவின் ஹவுரா பாலத்தின் கீழ் உள்ள
கங்கை நதியில்,
நேற்று முன்
தினம்(ஜூன்
16) மாலை, இந்த
மேஜிக்கை நிகழ்த்த,
பொலிஸ் அனுமதி
பெற்றார். லஹிரியின்
மேஜிக்கை காண,
ஹவுரா பாலத்தில்,
பொதுமக்கள் திரண்டனர். ஒரு படகில் ஏறிக்
கொண்ட லஹிரி,
பாலத்தின் அருகே
வந்தார். அவரது
கைகளும், கால்களும்,
சங்கிலியால் கட்டப்பட்டன. அவர், கூண்டுக்குள் அடைத்து,
பூட்டப்பட்டார்.
இந்நிலையில்,
பாலத்தில் நின்றிருந்த,
'கிரேன்' லஹிரி
அடைக்கப்பட்ட கூண்டை, துாக்கி சென்று, கங்கை
ஆற்றின் நடுவே
தண்ணீருக்குள் போட்டது. மக்கள், கைதட்டி ஆரவாரம்
செய்தனர். கை,
கால்கள் கட்டப்பட்டதை
அவிழ்த்துக் கொண்டு, தண்ணீருக்குள் இருந்து, லஹிரி
மீண்டு வரும்
காட்சியை காண,
திகிலுடன் காத்திருந்தனர்.
ஆனால்,
நீண்ட நேரம்
ஆகியும், லஹிரி,
மீண்டு வரவில்லை.
இதனால், பதற்றம்
அடைந்த சிலர்,
போலீசில் புகார்
அளித்தனர். பேரிடர் மீட்புப்படை வீரர்கள், கங்கை
ஆற்றில் குதித்து,
லஹிரியை தேடத்
தொடங்கினர். இருட்டிவிட்டதால், தேடுதல் பணியை தொடர
முடியவில்லை. இதையடுத்து, நேற்று(ஜூன் 17) மீண்டும்,
தேடுதல் பணி
தொடர்ந்து நடைபெற்றது.
'சரியான
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல்,
இந்த நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு
உள்ளது' என,
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0 comments:
Post a Comment