ஓய்வு பெறுமாறு கூறிய சம்பவம்
- அதிர்ந்துபோன ரணில்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி, பல பேர் முன்னிலையில் ரணிலை ஓய்வு பெறுமாறு கூறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், சமகால சபாநாயகருமான மொஹமட் நஷீம் உட்பட 90 பேருக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளியைில் இராபோசன விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது இடம்பெற்ற நட்புறவான கலந்துரையாடலில், “நாங்கள் தற்போது பிரதமருக்கு ஓய்வு கொடுப்போம். அவருக்கு தற்போது களைப்பாக இருக்கும்என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர்ஓய்வு பெற வேண்டுமாஎன அதிர்ச்சியுடன் வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி, “இந்த இரவில் ஓய்வு வழங்குவதற்கே நான் எண்ணினேன்என குறிப்பிட்டுள்ளார்




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top