ஓய்வூதியக் கொடுப்பனவு அதிகரிப்பு
நிதியமைச்சின் விசேட அறிவிப்பு

இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட்டிருப்பதாக நாட்டின் நிதியமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
                                              
நிதியமைச்சர் விசேடமாக தயாரித்த அறிக்கையின் பிரகாரம் எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் இந்த சம்பள முரண்பாடு முடிவுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்ற அரச பொது உத்தியோகத்தர்களின் மாதாந்த கொடுப்பனவு குறைந்த தொகையாக 2800ரூபாவில் இருந்து கூடிய தொகையாக 20000 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி ஆண்டுக் காலத்தில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையினை இணைக்கின்றோம்.



Add caption

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top