நாளையதினம் நாடாளுமன்றில்
இடம்பெறவுள்ள மாற்றம்!
கபீர், ஹகீம், ரிஷாட் முன்வரிசையில்
சிரேஷ்டத்துவம் அடிப்படையில்
ஏனைய முஸ்லிம் எம்.பிக்கள் பின்வரிசைகளில்
நாளைய
தினம் (18) நாடாளுமன்றம் கூட்டப்படும்போது
அண்மையில் கூட்டாக பதவிகளில் இருந்து விலகிய அமை ச்சர்களுக்கு இரண்டு பிரிவுகளில்
ஆசனம் வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ
தெரிவித்துள்ளார்.
இதன்படி
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழமைபோன்று முன்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட
உள்ள தாகவும் ஏனையோருக்கு பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
கட்சித்
தலைவர்களின் கூட்டத்தின் போது எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய
கட்சியின் தவி சாளர் கபீர் ஹசீம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிர ஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகிய
உறுப்பினர்கள் முன்வரிசையில் அமர உள்ளனர்.
ஏனைய
உறுப்பினர்கள் அவர்களின் சிரேஷ்ட தன்மை அடிப்படையில் பின்வரிசையில் அமர உள்ளதாக
தெரிவி க்கப்படுகின்றது.
முஸ்லிம்
அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்துக்கு
கிடை க்கப் பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ
தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையிலேயே
இந்த ஆசனப்பகிர்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment