'தெரிவுக்குழுவிலிருந்து
ஹக்கீம்
விலக வேண்டுமாம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
தெரிவிப்பு
தடைச்
செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹித் ஜமாஆத் அமைப்பின் தலைவரும், உயிர்த்த
ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் ஹாசிமுடன், ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் ஒப்பந்தம் செய்திருப்பதால், நாடாளுமன்றத்
தெரிவுக்குழுவில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ
லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அக்கட்சியின்
தலைமையகத்தில் இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, நாடாளுமன்ற
உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
உயிர்த்த
ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைச் செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியளித்த பதவிவிலகியுள்ள
ஆளுநர் ஹிஸ்புல்லா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் சஹ்ரானுடன் ஒப்பந்தம்
செய்திருந்ததாகத் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment