மசாஹிமாவின் கைது மற்றும்
தடுத்துவைத்தல் சட்டவிரோதமானது..!
அடிப்படை உரிமைகள் மீறல்கள் 
வழக்கு தாக்கல்

மசாஹிமாவின் கைது மற்றும் தடுத்துவைத்தல் சட்டவிரோதமானது(illegal arrest and detention) என்பதை நிரூபிக்க உயர்நீதிமன்றில் நேற்று 13/06/2019 எமது Fast & First Team ஐச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழு அடிப்படை உரிமைகள் மீறல்கள் வழக்கை தாக்கல் செய்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி J.C.வெலியமுனயின் தலைமையில் எமது குழு இந்த வழக்கை கொண்டு நடாத்தி பாதிக்கப்பட்ட மசாஹிமாவுக்கு சரியான நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வரை போராடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது ஆலோசனைகளினூடாக சட்டமொரு இருட்டறையல்லஎன்பதையறிந்து தைரியமாக கொழும்பு வந்து சத்தியக்கடதாசிகளில் (Affidavits) ஒப்பங்களை வைத்து எமக்கு வழக்காடுவதற்கான அதிகாரத்தை தந்த மசாஹிமா, அவருடைய கணவன் மற்றும் மகள் ஆகியோர் தமது செயற்பாட்டினால் உலகிற்கு கூறிய ஒரேயொரு விடையம் நாம் ஏழைகள் ஆனால் கோழைகளல்லஎன்பதாகும்.

சட்டத்தரணி சறூக் -கொழும்பு




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top