மோடியின் பிறந்த நாளில் நாமலுக்கு திருமணம்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிகிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவுக்கு எதிர்வரும்  செப்டெம்பர் 17ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமைஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, தனக்குத் திருமணம் நடைபெறவுள்ளது குறித்து அவர், தகவல் வெளியிட்டுள்ளார்.

செப்டெம்பர், 17ஆம் திகதி தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஸ கூறியதும், எதற்காக அந்த நாளை தெரிவு செய்தீர்கள் என்று இந்தியப் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு நாமல், சாதாரணமாக ஒரு நாளை தெரிவு செய்ததாக குறிப்பிட்டார்.

அப்போது, இந்தியப் பிரதமர் மோடி, “ஏன் அவ்வாறு கேட்டேன் என்றால், அன்று தான், (செப்டெம்பர் 17) எனது பிறந்த நாள்என்று மோடி பதிலளித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஸவை திருமணம் செய்து கொள்ளவுள்ள மணப்பெண்,   நன்கு அறியப்பட்ட விளையாட்டு ஆர்வலரும், லங்கா ஸ்போர்ட்ஸ் ரைசனின் (எல்.எஸ்.ஆர்) நிறுவுநருமான திலக் வீரசிங்கவின் ஒரே மகள், ஆவார்.

இவரது, தாயார் அருணி விக்ரமரத்ன, தேசிய அளவிலான ஓட்ட சாம்பியனாவார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top