அஹமட் மில்ஹான் ஹயாத்து முஹம்மத் கைது
விசாரணைகளுக்கு பெரும் ஒத்துழைப்பு
இன்ரர்போல் வெளியிட்ட தகவல்



மத்திய கிழக்கில் கைது செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் கைது செய்யப்படுவதற்கு சிவப்பு அறிவித்தலே காரணமாக அமைந்தது என இன்ரர்போலின் செயலாளர் நாயகம் ஜுகன் ஸ்டொக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையரான மில்ஹான், பயங்கரவாதம் மற்றும் கொலை குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் தேடப்பட்டு வந்த ஒருவர்.

இலங்கையில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சம்பவ பதிலளிப்பு குழு ஒன்று நிறுவப்பட்டிருந்ததுடன், அதற்கமைய சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மில்ஹான் கைது செய்யப்பட்டமையானது நடைபெற்றுவரும் விசாரணைகளின் முக்கியமான படிநிலை என்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இன்ரர்போல் பெருமிதம் கொள்வதாகவும் அதன் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஐவரின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில்,

ஹயாத்து மொஹம்மது அஹமட் மில்ஹான் வயது 30 - புதிய காத்தான்குடி, FC வீதி
மொஹம்மட் மர்சூக் மொஹம்மட் ரிழா, வயது 34 - ஸம்ஸம் வீதி, மருதமுனை 03
மொஹம்மட் மொஹிதீன் மொஹம்மட் சன்வாஸ் சப்ரி, வயது 45 - சாராஸ் கார்டன், வெல்லம்பிட்டி
மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் இல்ஹாம், 29 வயது - கபூரடி வீதி, காத்தான்குடி 01
அபூசாலி அபூபக்கர், வயது 37 - எல்லவெவ, ஹிஜ்ராபுரம், கெபிதிகொல்லாவ

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top