இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள்
10 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

அரசாங்கத்தின் பொறுப்புக்களிலிருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் கூடிக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசியல் நிலைமைகள், முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் நெருக்கடிகள், கல்முனை வடக்கு உப பிரிவைத் தரமுயர்த்துதல், மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top