தனி சிங்கள இராச்சியத்தை உருவாக்க
தமிழர்களுக்கும் அழைப்பு..
கண்டியில் ஞானசாரர் ஆவேசப்பேச்சு

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்கும் பொறுப்பை இந்த நாட்டிலுள்ள பிக்குகளிடம் ஒப்படைக்குமாறும் தேசிய பிரச்சினையாக காணக்ககூடிய இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை பாதுகாக்க தமிழ் சகோதரர்களும் எங்களுடன் ஒன்று சேருங்கள்என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பினால் கண்டியில் முன்னெடுக்கப்பட்ட மாநாட்டின் போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அடிப்படைவாதம் எனும் விசப் பாம்பை அழிப்பதற்கு தர்மம் எனும் பெயரையுடைய வாளினால் மாத்திரமே முடியும்.

பிக்குகளும் இப்போதாவது பீட பேதம், நிற பேதம் என்பவற்றைப் பின்னால் வைத்து விட்டு தேசிய பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும் எனவும் தேரர் அழைப்பு விடுத்தார்.

உலமா சபையுடனான அனைத்து வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

தனி சிங்கள இராச்சியத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை கண்டியிலிருந்தே ஆரம்பிப்போம்.

இது சிங்கள நாடு . இவ்வாறு கூறியதற்காக தமிழ் சகோதரர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். அதே போன்று நாம் கள்ளத்தோணிகளும் அல்ல.

அத்துடன் தேசிய பிரச்சினையாக காணக்ககூடிய இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை பாதுகாக்க தமிழ் சகோதரர்களும் எங்களுடன் ஒன்று சேருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.

அத்துடன் 1950 ஆம் ஆண்டில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆனை இலங்கை வாழ் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.

ஒரு கடவுள் என்றால் ஓரு குர்ஆன் தான் காணப்பட வேண்டும். இதனை விடுத்து உலமா சபை அடிப்படைவாத்தை விதைத்ததால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். எனவே போதும் அத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top